ஆபத்தான குழி

Update: 2023-07-12 10:21 GMT

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் நாடார் சங்க மண்டபம் எதிரே பெரிய அளவில் ஆபத்தான குழி உள்ளது. குடிநீர் குழாயை சீரமைப்பதற்காக தோண்டப்பட்ட குழி, இதுவரை முறையாக மூடவில்லை. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஆபத்தான அந்த குழியால் விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்