வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-07-12 08:44 GMT

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட விழுந்தயம்பலத்தில் இருந்து அம்சி சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், இந்த சாலையோரத்தில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளும் பழுதடைந்து சரியாக எரிவதில்லை. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை சீரமைத்து பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கவேல், விழுந்தயம்பலம்.

மேலும் செய்திகள்