சென்னை வேளச்சேரி சங்கரன் அவென்யூ 1-வது தெருவில் மரம் ஒன்று விழுந்து, கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக அகற்றப்படாமல் இருக்கிறது. இதனால் அருகில் உள்ள வீட்டில் இருந்து உள்ளே வாகனங்களை எடுத்து சென்று வர இடையூறாக உள்ளது. யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. வீட்டின் வாசலிலேயே கிடப்பதால் பாதசாரிகள் நடைபாதையில் சென்றுவரவும் சிரமமாக உள்ளது. அதிகாரிகள் கவனித்து மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.