சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை நேரு பூங்கா பின்புறம் உள்ள சாஸ்திரி நகர் முதல் தெருவில் மின்சாரம் பழுதடைந்த காரணத்தினால் ஒரு மாதத்திற்கு முன்பு மின்வாரியத்தால் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் மின் இணைப்பு சரி செய்யப்பட்டுவிட்டது, ஆனால் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடும் போது சரியாக மூடாமல் கற்குவியலை குவித்து வைத்தது போல் போட்டு வைத்துள்ளனர். மேலும் வயர்களும் மேலேயே கிடக்கின்றன. மின்வாரியம் தகுந்த முறையில் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரியாக மூட ஆவண செய்ய வேண்டும்.