முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்யும்போது, சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதியடைகின்றனர். எனவே அங்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.