நாமக்கல் கோட்டை சாலையில் அரசு பள்ளிகள் உள்ளன. இதில் ஏராளமானோர் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் கோட்டை சாலையில் கண் மருத்துவமனை அருகில் உள்ள சாலையை கடந்து சென்று வருகின்றனர். இந்தநிலையில் கோட்டை சாலையில் கார், பஸ், இரு சக்கர வாகனங்கள் அதிகம் சென்று வருவதால் மாணவ, மாணவிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி அந்த பகுதிகளில் சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.