திருவாரூர் புது தெரு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால் சாலையை விட உயரமாக உள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்குவதோடு வயதானவர்கள் வீட்டிற்கு சென்று வர சிரமம் ஏற்படுகிறது. மேலும் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சமப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்