தாமதமாகும் சாலை பணிகள்

Update: 2023-06-28 09:42 GMT
ராசிபுரம், கூனவேலம்பட்டி புதூரில் சாலை விரிவாக்கம் மற்றும் தார் ரோடு போடும் பணிகள் மிக மெதுவாக நடைபெற்று வருகிறது. ஊரில் உள்ள அனைத்து இணைப்பு சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மெயின் ரோட்டிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பாலப்பாளையம் மயான பாதை வழியாக ஊரைச் சுற்றி சென்று வருவதால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்