கிருஷ்ணகிரி பர்கூர் பேரூராட்சி 15-வது வார்டு கரீம் சாகிப் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருவில் உள்ள சிமெண்டு சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ், பர்கூர்.