தஞ்சையை அடுத்த கண்டிராம்பட்டு தெற்கு தெருவில் சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குகிறது. மேலும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.