அதிகரிக்கும் விபத்துகள்

Update: 2023-06-25 10:56 GMT

கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மார்தோமா நகர்-புத்தூர் வயல் பிரிவில் சாலை பழுதடைந்து கிடக்கிறது. இதன் காரணமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வாகன விபத்துகளும் தொடர்ந்து அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் சாலையை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அந்த சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்