குண்டும், குழியுமான சாலை

Update: 2023-06-25 09:11 GMT

கூடலூரில் உள்ள நந்தட்டியில் இருந்து அட்டி பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் மாணவர்கள், வயதானவர்கள் நடந்து செல்லும்போது தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. அதுவும் மழை பெய்துவிட்டால், அந்த சாலை போக்குவரத்து பயன்படுத்த முடியாததாக மாறிவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்