ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலபள்ளி அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. இதன் நுழைவாயில் அருகே சாலையில் நீண்ட நாட்களாக பள்ளம் ஏற்பட்டு அதில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் நாள் தோறும் வியாபாரிகள், பொது மக்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு பள்ளம் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.பிரகாஷ், ஓசூர்.