போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2023-06-21 16:38 GMT
கடலூர் பஸ்நிலையம் அருகே பூ மார்க்கெட்டுக்குள் செல்லும் சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்கின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால், பஸ் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்