பந்தலூர் அருேக உள்ள கோட்டப்பாடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார்சாலை கிடையாது. சோலிங்கற்கள் பதிக்கப்பட்ட சாலை மட்டுமே உள்ளது. அந்த சாலையும் மழை வெள்ளத்தால் அரிக்கப்பட்டு, ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதடைந்து விடுகின்றன. மேலும் நடந்து செல்லும் போது கால் தவறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.