நாமக்கல் புதுச்சத்திரம் அருகே எஸ்.நாட்டாமங்கலம் ஊராட்சி அண்ணா நகரில் இருந்து வையப்பமலை செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், நாமக்கல்.