நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ராஜவீதி பகுதியில் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோட்டிற்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டது. உடைந்த குழாயை சரி செய்து பள்ளம் மூடப்பப்பட்டது. ஆனால் புதிதாக சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்லும் போது மண் புழுதி பறக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்களில் புழுதிபட்டு கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாபு, பள்ளிபாளையம்.