பள்ளமான சாலை

Update: 2023-06-14 17:30 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து வளையபட்டி செல்லும் சாலையில் பரளி பிரிவு ரோடு அருகே தார் சாலையில் குடிநீர் குழாய் ெகாண்டு செல்வதற்காக குழி தோண்டப்பட்டது. அதை சரியாக மூடி மீண்டும் தார் போடாததால் சாலை பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சின்னப்பன், மோகனூர்.

மேலும் செய்திகள்