விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-06-14 17:20 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. அதேசமயம் மத்தூர் ஊருக்குள் வந்து போகும் சாலையில் இருபுறமும் சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்பட்டு சிமெண்டு பலகைகளால் மூடப்பட்டது. அவ்வாறு மூடப்பட்ட சிமெண்டு பலகைகளின் இருபுறமும் சாக்கடை சந்துகளிலும் மண் கொண்டு நிரப்பப்படாமல் விட்டுவிட்டனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை பலகைகளை சரியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரவி, மத்தூர்.

மேலும் செய்திகள்