திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் என்கிற இடத்தில் நெடுஞ்சாலை துறையினரால் சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர்- நாகை சாலை போக்குவரத்து அதிகமாக உள்ள சாலை என்பதால் தற்போது பணி நடைபெறும் இடத்தில் வாகனம் செல்ல சிரமமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையிலேயே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகவே சாலை பணியினை விரைந்து முடிக்கவும், பணி நடைபெறும் இடத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போக்குவரத்து காவலர்கள் இருக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,திருவாரூர்