ஏலமன்னா அருகே பன்னிகொல்லியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக மழைக்காலத்தில் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த சமயத்தில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.குண்டும், குழியுமான சாலை