நடவடிக்கை தேவை

Update: 2023-06-14 07:13 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்குகோணத்தில் கிறிஸ்தவ ஆலயம் முன்பு அனந்தனார் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் கடந்த பருவ மழையின்போது ஏற்பட்ட உடைப்பு இதுவரை சரிசெய்யவில்லை. வருகிற பருவமழை காலங்களில் மேலும் கால்வாய்கரையில் அரிப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு சாலை தூண்டிக்கபட்டு போக்குவரத்து முடங்கினால் அந்த வழியாக செல்லும் பள்ளி-கல்லூரி வாகனங்கள் மற்றும் ஆசாரிபள்ளம் செல்லும் ஆம்புலன்ஸ் உள்பட அனைத்து வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படும். எனவே, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் கால்வாய் கரையை சீமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்