சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வர்ணம் பூசாததால் இரவு நேரங்களில் அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் வேகத்தடையில் ஏறி, இறங்கும் போது விபத்து ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். எனவே விபத்தை தவிர்க்க வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்யடிது அவசியம்.