சேதமடைந்த சாலை

Update: 2023-06-11 14:22 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை தாமரைக்குளம் வடகரையில் சிமெண்டு சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். சேதமடைந்த சாலையினால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா;?



மேலும் செய்திகள்