நாகர்கோவில் கோட்டார் சிதம்பரம்நகரில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் திருப்பத்தில் சாலையோரம் கழிவுநீர் ஓடை மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் தினமும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். அவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ-மாணவிகளின் நலன்கருதி சேதமடைந்த சிமெண்டு சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கென்னடி ரோட்ரிக்கோ, சிதம்பரம்நகர்.