நடுவீரப்பட்டு நயினார்பேட்டையில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.