கடலூர் பூ மார்க்கெட்டில் இருந்து பஸ்நிலையம் செல்லும் சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பஸ்நிலையத்திற்கு செல்லும் பயணிகள், வாகன ஓட்டிகள் அல்லல்பட்டு வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
