சாலையில் பள்ளம்

Update: 2023-06-07 10:30 GMT
கூடலூர் செவுடி பேட்டையில் சக்தி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இதன் முன்பு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கோவில் முன்பு உள்ள சாலையில் ராட்சத பள்ளம் காணப்படுகிறது. இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. பள்ளத்தில் வாகனங்கள் இறங்காமல் செல்ல கோவில் நுழைவு வாயில் அருகே வாகனங்களை டிரைவர்கள் ஓட்டி செல்கின்றனர். இதனால் பக்தர்கள் மீது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையின் நடுவில் உள்ள ராட்சத பள்ளத்தை சமப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சந்திரன், கூடலூர்-

மேலும் செய்திகள்