திருச்செந்தூர்- தூத்துக்குடி மெயின் ரோட்டில் முக்காணி- முள்ளக்காடு இடையே சாலையோரம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களும் அவதியடைகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.