ஓசூரில் பாகலூர் ரோடு சர்க்கிள் அருகே நகைக்கடை எதிரில் பாகலூர் நோக்கி செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக மிகப்பெரிய பள்ளம் உள்ளது. நகரின் முக்கிய பகுதியாகவும், 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் இந்த சாலையில் இவ்வாறு பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டிகள் எதிர்பாராத வகையில் விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய், ஓசூர்.