சங்கராபுரம் அருகே மயிலாம்பாறையில் இருந்து பொய்குணம் செல்லும் தார் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.