கடலூர் நகர பகுதியில் உள்ள சாலைகளில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவைகள் நடுரோட்டில் ஆங்காங்கே படுத்து கிடப்பதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், கால்நடைகளால் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.