குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-28 17:14 GMT

நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு துறையூர் சாலையில் இருந்து கொசவம்பட்டி ஏரிக்கரை வழியாக இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்