பிரம்மதேசம் அருகே முருக்கேரி-காயல்மேடு வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் கால விரையம் ஏற்படுவதோடு, அடிக்கடி அப்பகுதியில் விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.