பந்தலூர் அருகே கூவமூலாவில் இருந்து அருகில் உள்ள ஆதிவாசி காலனிக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத வகையில், அந்த சாலை உள்ளது. மழைக்காலத்தில் அந்த சாலை மேலும் ேமாசமாகி விடுகிறது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.