குண்டும் குழியுமான சாலை

Update: 2023-05-28 09:43 GMT

கே வாலிபாளையம் செல்லும் பிரிவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்தது. இந்த பணிக்காக சாலை பெயர்த்தெடுக்கப்பட்டது. அதன்பின்னர் பாதாள சாக்கடை பணியை முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். பணியை முடிக்காததால் சாலையும் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


----------

மேலும் செய்திகள்