ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகள் சிமெண்டு சாலைகளாகவும், தார் சாலைகளாகவும் உள்ளன. ஆனால் நகரங்களின் முக்கிய இடங்களில் உள்ள குறுக்குத்தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பட்டணம் சாலையில் இருந்து தியாகராஜர்சாமி கோவில் வழியாக செல்லும் சாலை, புதுப்பாளையம் சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகே இணைகிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். முதியவர்கள் தடுமாறி கீழே விழுகின்ற நிலையை பார்க்க முடிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தியாகராஜர் சாமி கோவில் தெரு சாலையை சீரமைக்க வேண்டும்.
-நாகச்சந்திரன், ராசிபுரம்.