கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி பாலக்கோடு செல்லும் மெயின்ரோட்டில் இருந்து எச்சம்பட்டி கிராமத்துக்கு செல்ல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலை போடப்பட்டது. தற்போது சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலைக்கு பதிலாக மீண்டும் (பேவர்பிளாக்) சிமெண்டு கல்பதித்து சீரமைத்து கொடுக்க கோரிக்கை வேண்டும்.
-எம்.சிவக்குமார், எச்சம்பட்டி, ராயக்கோட்டை.