நடுரோட்டில் பள்ளம்

Update: 2022-07-22 17:29 GMT

நடுரோட்டில் பள்ளம்

திருப்பூர் பாரப்பாளையத்தில் இருந்து ராயபுரம் செல்லும் வழியில் விநாயகபுரம் உள்ளது. இங்குள்ள பிரதான ரோட்டின் நடுவே கழிவு நீர் கால்வாய் அமைந்துள்ள பகுதியில் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் பள்ளம் பெரிதாகும் வரை காத்திருக்காமல் ஆரம்பத்திலேயே ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.

நைசிகா, பாரப்பாளையம். 98412 85733

----------

மேலும் செய்திகள்