சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-21 17:34 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து வளையப்பட்டி செல்லும் சாலையில் செவிட்டுரங்கன்பட்டி பிரிவு ரோடு அருகே செல்லும் குழாயை சீரமைக்க சாலை தோண்டி உள்ளனர். பிறகு சாலை அமைக்காமல் அப்படியே மண் போட்டு மூடி விட்டனர். இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்