குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-21 09:44 GMT

பந்தலூரில் இருந்து மேங்கோரேஞ்ச் வழியாக ஏலமன்னா பகுதிக்கு இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலையானது ஏலமன்னாவில் செங்குத்தான நிலையில் உள்ளது. மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் வாகனங்களையும் இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்