கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் ஹவுசிங் போர்டு முதல் இரட்டை ரோடு வரை தெரு மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலை இருளில் மூழ்கி காணப்படுவதால், அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் தெருமி்ன்விளக்குகள் அமைக்க வேண்டியது அவசியம்.