வேகத்தடை அவசியம்

Update: 2023-05-17 15:42 GMT

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 தனியார் கல்லூரிகளுக்கு அருகில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சர்வீஸ் ரோடுகள் செல்கின்றன. நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள் சேலம்-நாமக்கல் ரோட்டில் இருந்து சர்வீஸ் ரோட்டில் பிரிந்து செல்கின்றன. வேகமாக வரும் வாகனங்கள் சர்வீஸ் ரோட்டில் திடீரென்று பிரிவதால் விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமியப்பன், ஆண்டகளூர்கேட்.

மேலும் செய்திகள்