கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், அரசினர் ஐ.டி.ஐ. எதிரில் உள்ள அம்மன் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகள், குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி, உடனடியாக சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.கே.நசீர் அகமது, ஓசூர்.