கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள சீத்தாராம் நகர், பொன்னன் நகர் நான்கு முனை சந்திப்பில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்தை தவிர்க்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாநகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.