சங்கராபுரம்-பூட்டை செல்லும் வழியில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ள சாலை சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் பள்ளத்தை மூடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்தியை பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.