தஞ்சை ரகுமான் நகர் சாலை மருத்துவக்கல்லூரி, புதிய பஸ் நிலையத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த நிலையில் ரகுமான் நகர் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால் மழைநீர் வடிகாலில் செல்லாமல் சாலையில் தேங்கும் அவல நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிகாலில் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.