சங்கராபுரம்-பூட்டை செல்லும் வழியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சாலை சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி, நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.