நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் தலைமை தபால் அலுவலகம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி, எல்.ஐ.சி. போன்ற அலுவலகங்கள் உள்ளன. எனவே இந்த சாலையை தினசரி ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரில் ஆபத்தான பள்ளம் ஒன்று உள்ளது. இந்த பள்ளத்தால் இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.