கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே எமகல்நத்தம் கிராமத்தில் மழைக்காலங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளது. இந்த சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். இச்சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளுக்கு நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், கிருஷ்ணகிரி.